
ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ
செய்தி முன்னோட்டம்
மக்களவை எம்பியும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி தன் தந்தைக்கு பாங்காங் ஏரியில் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக அவர், கடந்த சனிக்கிழமை பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்றார்.
ராகுல் காந்தி பைக் ஓட்டும் படங்களை காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்தது. சில புகைப்படங்களை ராகுல் காந்தியும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்திருந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ராகுல் காந்தி, "இது உலகின் மிக அழகான இடங்களில் ஒன்று என்று என் தந்தை சொல்லி இருக்கிறார்" என கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ராகுல் காந்தி பைக் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ராகுல் காந்தி லடாக்கில் பைக் ஓட்டும் வீடியோ
#WATCH | Congress leader Rahul Gandhi rides bike during his Ladakh visit. pic.twitter.com/Nk0RM1EgLp
— ANI (@ANI) August 21, 2023