ரேபரேலிக்கு ராகுல் காந்தி, அமேதிக்கு கே.எல்.சர்மாவையும் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் இன்று காலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கே.எல்.சர்மாவும் போட்டியிடுகின்றனர். முன்னதாக நேற்றே இந்த தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமேதி, ரேபரேலி இந்த இரண்டு இடங்களும் நேரு குடும்பத்துடன் நீண்டகாலத் தொடர்பு கொண்டவை. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, இந்திராவின் மகனும் காங்கிரஸ் தலைவருமான சஞ்சய் காந்தி, முன்னாள் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி என நேரு குடும்பத்தை சேர்ந்த பலரும் இந்த இரண்டு இடங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ரேபரேலிக்கு ராகுல் காந்தி
#BREAKING | உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி.#SunNews | #RahulGandhi pic.twitter.com/i80ojYejed— Sun News (@sunnewstamil) May 3, 2024
நேரு-காந்தி குடும்பத்துடன் நீண்டகாலத் தொடர்பு கொண்ட தொகுதிகள்
ஏழு கட்ட பொதுத் தேர்தலின் ஐந்தாவது சுற்றில் மே 20 அன்று அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2004ஆம் ஆண்டு முதல் அமேதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ராகுல், 2019 ஆம் ஆண்டு வரை பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோற்கடிக்கப்படும் வரை தொடர்ந்து மூன்று முறை அதன் எம்பியாக பணியாற்றினார். தனித்தனியாக, தேர்தலுக்கு முன்னதாக, ரேபரேலி எம்.பி.,யான சோனியா, உடல்நிலை மற்றும் வயது காரணமாக, இந்த முறை போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். ஏற்கனவே அமேதியை விட ரேபரேலியில் ராகுல் போட்டியிடலாம் என்று ஊகங்கள் இருந்தன. இருப்பினும், கட்சியில் சில பெருந்தலைகள், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி வதேரா-வை நிற்க வைக்க ஆர்வம் கட்டியதாக கூறப்படுகிறது