பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம்
தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்கவுள்ளது. 6 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடக்கவுள்ள இந்த Quarterly Exam, பொது வினாத்தாள் முறை முறைப்படி நடைபெறும். நடைபெறப்போகும் இந்த தேர்வு, செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 15-ந்தேதி காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
6 நாட்கள் விடுமுறை
அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்போது, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்பட்டு, மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிவிறக்கம் செய்து தேர்வு நாளில் பள்ளிகளுக்கு வினியோகிக்கம் செய்வார்கள். தேர்வுகள் முடிந்த பின், ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை.