'என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத கருப்பு நாள்': கரூர் சம்பவத்தின் முதலாண்டு நினைவில் கலங்கிய முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கிய துயரச் சம்பவத்தின் முதலாண்டு நினைவையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறாத வேதனையையும் பகிர்ந்துள்ளார். இச் சம்பவத்தின் முதலாண்டு நினைவையொட்டி தனது எக்ஸ் (X) தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள முதல்வர் விஜய், இத்தினத்தை தன் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பதிவு
"பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாமே அரணாக இருப்போம்"
"என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம் இதே நாள், என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம் நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றி கழகத்தின் சொந்தங்களும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறும் வகையில் தொடர்ந்து பேசியுள்ள அவர்,"நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி" எனப் பதிவிட்டு ஒட்டுமொத்த தவெக குடும்பமும் இத்துயரத்தில் பங்கெடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 27, 2026
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து…