Loading...
தவெக MLA-க்கள் மீது தொடர் சர்ச்சைகள்: முதல்வர் விஜய் தலைமையில் ஈ.சி.ஆரில் அவசர ஆலோசனைக் கூட்டம்
முதல்வர் விஜய் தலைமையில் MLA-கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

தவெக MLA-க்கள் மீது தொடர் சர்ச்சைகள்: முதல்வர் விஜய் தலைமையில் ஈ.சி.ஆரில் அவசர ஆலோசனைக் கூட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
10:50 am

செய்தி முன்னோட்டம்

தவெக MLA-கள் சிலர் மீது அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் இன்று காலை இந்த கூட்டம் தொடங்குகிறது. கடந்த சில நாட்களாகத் தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது எழுந்துள்ள புகார்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சி தலைவர் என்ற முறையில் விஜய் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் மக்கள் பணிகளில் எத்தகைய கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து விஜய்யும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் விரிவான ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT