இரு தினங்களில் பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?
அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்று தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, நாளை மறுநாள் பிரதமர் மோடியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தால், முதல்வர் அவரை நேரில் சந்தித்து, தனது பிரயாண விவரங்களையும், மேலே குறிப்பிட்ட நிதி விவகாரம் பற்றியும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரெயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார்.