மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50% உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். சென்னையில், தமிழகத்திற்கான நிதி பகிர்வின் தொடர்பாக நடந்த நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,"முக்கியமான திட்டங்களை வடிவமைத்து நிறைவேற்றுவது மாநில அரசின் பொறுப்பாக உள்ளது. ஆனால், மத்திய அரசு சரியான வரி பகிர்வை வழங்காததால், மாநிலங்களின் கடமைகள் மற்றும் சுமைகள் அதிகரித்து வருகின்றன. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், மாநிலங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றும்." என்றார்.
Twitter Post
மாநில அரசுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு
முதல்வர் மேலும்,"மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இதனால், தமிழகத்தின் நிதி நிலை பாதிக்கப்படுகின்றது. வரி பகிர்வு முறையில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும். 41% என இருந்த முடிவையும், 33.16% மட்டுமே வழங்கியுள்ளதால், வரி பகிர்வு நிலைத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது." என்றார். மேலும்,"இப்போது நிலவி வரும் வரி பகிர்வு முறையினால் மாநிலங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இது தமிழகத்திற்கு ஒரு சீரற்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஆகவே, மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்" என்றார்.