இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜா, லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றினார்.
இதற்கு பல தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலினை, இளையராஜா சந்தித்து பேசினார்.
அதனை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் முதல்வர் இட்ட பதிவில் இந்த விழா நடத்துவது பற்றி கூறியுள்ளார்.
"ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!" என முதல்வர் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி @ilaiyaraaja அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும்… pic.twitter.com/e3Ofpt2Upq
சிம்பொனி
வெறும் 35 நாட்களில் சிம்பொனியை எழுதிய இளையராஜா
லண்டன் நிகழ்ச்சியில் வேலியண்ட் என்ற தலைப்பில் அவரது முதல் சிம்பொனி இடம்பெற்றது.
அதை அவர் வெறும் 35 நாட்களில் உருவாக்கினார்.
இந்த சாதனை, இவ்வளவு மதிப்புமிக்க உலகளாவிய மேடையில் சிம்பொனியை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அவருக்கு அளிக்கிறது.
90 நிமிட நிகழ்வில் 45 நிமிட சிம்பொனி பகுதியும் இடம்பெற்று. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த இசை நிகழ்ச்சியில் அவரது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட புகழ்பெற்ற பிரபலங்களும், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பால்கியும் கலந்து கொண்டனர்.
ரசிகர்கள் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பை அளித்ததால், அரங்கில் இருந்த சூழல் மிகவும் உற்சாகமாக இருந்தது.