Page Loader
பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு வித்தகர் விருது: நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர்
ஃபைல் ஃபோட்டோ

பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு வித்தகர் விருது: நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 04, 2024
12:42 pm

செய்தி முன்னோட்டம்

பழம்பெரும் பின்னணி பாடகி பி. சுசிலா, ஆந்திர மாநிலம் விஜயநகரில் 1935-ம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி பிறந்தவர். 70 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில், அவர் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடி சாதனைகள் படைத்துள்ளார். தமிழக அரசு மற்றும் மத்திய அரசால் பல முறை விருதுகள் பெற்றுள்ளார். இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அதே போல், கவிஞர் முகமது மேத்தா, மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் என பல்வேறு நூல்கள் எழுதி, 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். 'சாகித்ய அகாடமி' விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

விருது

தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்தது

கலைத்துறையில் உள்ள சுசிலா மற்றும் மு.மேத்தாவின் சேவையை பாராட்டி, தமிழக அரசு கடந்த வாரம் கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று, அக்டோபர் 4 சென்னை தலைமை செயலகத்தில், பி. சுசிலா மற்றும் மு. மேத்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் இந்த விருதினை வழங்கி கவுரவித்தார். விருதுடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post