
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
அதனை தொடர்ந்து மூன்றாம் நாள் பண்டிகையான காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். குறிப்பாக காணும் பொங்கல் அன்று கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம்.
அதனை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது வரை காமராஜர் சாலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு, பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ட்விட்டர் அஞ்சல்
போக்குவரத்து காவல்துறை அறிக்கை
Safety tips for Chennaiites who wishes to celebrate Kaanum Pongal in the beach or in other places.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) January 16, 2024
காணும் பொங்கலுக்காக கடற்கரை மற்றும் பொது இடங்களில் கூட இருக்கும் சென்னைவாசிகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள்.#HappyPongal#Chennai #Police #InPublicService @SandeepRRathore… pic.twitter.com/SxOnJnuJIE
ட்விட்டர் அஞ்சல்
போக்குவரத்து காவல்துறை அறிக்கை
காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்ற ஏற்பாடுகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் தங்களின் தகவலுக்காக.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) January 16, 2024
சாலை விதிகளை பின்பற்றி, காணும் பெங்கலை பாதுகாப்பாக கொண்டாடலாம். #ChennaiTraffic #Update@SandeepRRathore@R_Sudhakar_Ips @chennaipolice_ pic.twitter.com/kVaQwyBb5n