Page Loader
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 31, 2025
10:18 am

செய்தி முன்னோட்டம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், கடந்த 25ஆம் தேதி காரில் சென்ற பெண்களை, தி.மு.க. கொடி கட்டிய இரண்டு கார்களில் பயணித்த இளைஞர்கள் துரத்திய சம்பவத்தில், கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 25ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு தோழியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை இரண்டு கார்களில் வந்த 8 வாலிபர்கள் பின்தொடர்ந்தனர். முட்டுக்காடு பாலம் அருகே, அவர்கள் இரண்டு கார்களை சாலையின் குறுக்கே நிறுத்தி, பெண்கள் சென்ற காருக்கு வழி விடாமல் அச்சுறுத்தியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் வழக்கு பதிந்ததன் விளைவாக தற்போது வரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவரங்கள்

வழக்கு விவரங்கள் இதோ

கடந்த 25 ஆம் தேதி சென்னை கானத்தூரைச் சேர்ந்த 26 வயது பெண், தனது தோழியுடன் கோவளத்திலிருந்து தனது வீட்டிற்கு சென்றனர். அப்போது, இரண்டு கார்களில் வந்த 8 வாலிபர்கள் அவர்களை பின்தொடர்ந்தனர். முட்டுக்காடு பாலம் அருகே, அவர்களை இடைமறித்து அச்சுறுத்தியுள்ளனர். பெண்கள் தப்பி வீட்டிற்கு செல்ல முயற்சித்த நிலையில், அந்த வாலிபர்கள் இரு கார்களுடன் தொடர்ந்து பின்தொடர்ந்து பனையூரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து, கானத்தூர் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, வாலிபர்களை பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்தனர். அதோடு இரும்புலியூரில் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்களை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.