5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்குமா? தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் மற்றும் வாதங்களின் விவரம்
இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைத்தேர்தல் நடத்துவது குறித்துத் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த இறுதியான முடிவும் எடுக்கவில்லை என்றும், அதற்கு ஆறு மாத கால அவகாசம் உள்ள நிலைக் கோரி மனுதாரர் முன்கூட்டியே வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தெலுங்கானா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தாலும் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது என்றும், நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்தவொரு உத்தரவையும் அமல்படுத்தத் தயாராக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
சென்னை உயர் நீதிமன்றம்
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்
மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்து பூர்த்தி செய்தனர்.
தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பது மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் சட்ட நடைமுறைகள் குறித்த பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வாதத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டன.
அனைத்துத் தரப்பு வாதங்களும் முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கில் தீர்ப்பளிப்பதைத் தலைமை நீதிபதி அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.