Page Loader
LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு

எழுதியவர் Sindhuja SM
Oct 17, 2023
12:14 pm

செய்தி முன்னோட்டம்

LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது, அந்த தம்பதிகளுக்கு குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமையை வழங்குவது போன்ற பிரச்சனைகள் குறித்த முக்கிய தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தனது தீர்ப்பை வழங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், LGBTQIA+ நபர்கள் தம்பதிகளாவதற்கான உரிமைகளில் பாகுபாடு காட்ட வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

டிஜிவ்க்க்

இந்திய தலைமை நீதிபதி தனது உத்தரவின் போது கூறியதாவது:

குயர் சமூகத்தினர் நகர்ப்புற உயரடுக்கினர் மட்டுமல்ல. குயர் சமூகத்தினர் நகர்ப்புறத்தை மட்டும் தேர்ந்தவர்கள் என்று சொல்வது, கிராமங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள குயர் நபர்களின் அடையாளத்தை அளிக்கும் முயற்சி. இந்த விஷயத்தில் இலக்கியத்தின் வரையறுக்கப்பட்ட ஆய்வின் மூலம், தன் பாலின ஈர்ப்பு ஒரு புதிய பாடம் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. சிறப்புத் திருமணச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும். இந்த நீதிமன்றம் சட்டமியற்றும் களத்திற்குள் நுழைய விரும்பவில்லை. திருமணம் என்ற விஷயம் சதியில் ஆரம்பித்து விதவைகள் திருமணம், குழந்தைகள் திருமண ஒழிப்பு என பல நிலையை கடந்து வந்துள்ளது. எனவே, திருமணம் ஒரு நிலையான மற்றும் மாறாத நிறுவனம் என்று கூறுவது தவறானது.