Page Loader
'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி
இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Jul 01, 2023
02:37 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக ரூ.6.5 லட்சம் கோடி செலவழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 1) தெரிவித்தார். சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில்(ஐஇசிசி) 17வது இந்திய கூட்டுறவு மாநாட்டின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசும் போது, கூட்டுறவு சங்கங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர், சமையல் எண்ணெய்களில் இந்தியாவை தன்னிறைவு உள்ள நாடாக மாற்ற கூட்டுறவு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று கோரினார்.

ஜட்ஸ்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:

தற்போது மீன்பிடித் துறையில் 25,000க்கும் மேற்பட்ட கூட்டுறவுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் உள்நாட்டு மீன்பிடித்துறை 2-மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், அவர்களின் வருமானமும் மேம்படும். பால் பவுடரில் இருந்து நெய் வரை இந்திய விளைபொருளுக்கு உலக அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. நமது சிறுதானியங்களுக்கு புதிய சந்தை உருவாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஏதாவது ஒரு வகையில் சராசரியாக ரூ.50,000 அரசு வழங்குகிறது. பல சிறு விவசாயிகள் இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல் PM-KISAN திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம் கோடி நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.