
பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து; மொத்தம் எத்தனை செம்மொழிகள் உள்ளன?
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியது.
இது குறித்து வெளியான அறிக்கையில்,"பாரம்பரிய மொழிகள் பாரதத்தின் ஆழமான மற்றும் பண்டைய கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலராக செயல்படுகின்றன, ஒவ்வொரு சமூகத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார மைல்கல்லின் சாரத்தையும் உள்ளடக்கியது" என மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, பெங்காலி மற்றும் மராத்தி தவிர, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமிய மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையால், ஏற்கனவே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய மொழிகள் உடன் சேர்த்து தற்போது இந்தியா மொழிகளில் செம்மொழியாக அங்கீகாரம் பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11ஐ எட்டியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பிரதமர் மோடி ட்வீட்
Our Government cherishes and celebrates India's rich history and culture. We have also been unwavering in our commitment to popularising regional languages.
— Narendra Modi (@narendramodi) October 3, 2024
I am extremely glad the Cabinet has decided that Assamese, Bengali, Marathi, Pali and Prakrit will be conferred the…
செம்மொழி அந்தஸ்து
செம்மொழி அந்தஸ்து வழங்குவதன் பயன் என்ன?
மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதால் என்ன பயன் என கேட்பவர்களுக்கு.. செம்மொழியாக மொழிகளைச் சேர்ப்பது வேலை வாய்ப்புகளை உருவாக்கும், குறிப்பாக கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.
மேலும், இந்த மொழிகளின் பண்டைய நூல்களைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் சார்ந்தும், மொழிபெயர்ப்பு, வெளியீடு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
இவ்வாறு மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.