NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், பீகாரில் இருவரை கைது செய்த சிபிஐ
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், பீகாரில் இருவரை கைது செய்த சிபிஐ
    சிபிஐ எடுத்துள்ள முதல் குறிப்பிடத்தக்க கைது நடவடிக்கை இதுவாகும்

    நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், பீகாரில் இருவரை கைது செய்த சிபிஐ

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 27, 2024
    03:36 pm

    செய்தி முன்னோட்டம்

    நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வியாழக்கிழமை இருவரை கைது செய்துள்ளது.

    இந்த வழக்கில் சிபிஐ எடுத்துள்ள முதல் குறிப்பிடத்தக்க கைது நடவடிக்கை இதுவாகும்.

    பாட்னாவைச் சேர்ந்த மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் என அடையாளம் காணப்பட்ட இரு நபர்களைக் பீகாரில் கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள்.

    நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக, மே 4 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள லேர்ன் ப்ளே ஸ்கூலுடன் தொடர்புடைய ஆண்கள் விடுதியில் மாணவர்களை அசுதோஷின் உதவியுடன் மணீஷ் பிரகாஷ் தங்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

    சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு மணீஷ் கைது செய்யப்பட்டார்.

    குற்றவாளிகள் இருவரும் 3 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    நீட் வினாத்தாள் கசிவு

    #BreakingNews: Manish Prakash and Ashutosh Kumar arrested by CBI In #NEET case from Patna

    News18's @Arunima24 and @_anshuls share more on this | Avantika Singh #NEET #NEETPaperLeak #CBI #Bihar pic.twitter.com/1F9lxQQRrW

    — News18 (@CNNnews18) June 27, 2024

    விசாரணை விவரங்கள்

    சிபிஐ விசாரணை, EOU தொடர்புகளை வெளிப்படுத்துகிறது

    வினாத்தாளை முன்கூட்டியே எவ்வாறு பெற்றனர் என்பதையும், மே 5ஆம் தேதி தேர்வுக்கு முன்னர் பதில்களை மனப்பாடம் செய்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையையும் தீர்மானிக்க சிபிஐ அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

    பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) நடத்திய விசாரணையில், அவர்களில் ஒருவர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகியாரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரிடம் இருந்து 20 ஏடிஎம் கார்டுகள், 21 வெற்று காசோலைகள் மற்றும் ₹50,000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.

    தேர்வு சர்ச்சை

    NEET-UG தேர்வு முடிவுகள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது

    மே 5-ஆம் தேதி 4,750 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு, முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளால் சர்ச்சையை சந்தித்து வருகிறது.

    முன்னோடியில்லாத எண்ணிக்கையிலான மாணவர்கள் - 67 பேர் - சரியான 720 மதிப்பெண்களைப் பெற்றனர், அதே நேரத்தில் 1,563 விண்ணப்பதாரர்களுக்கு இழந்த நேரத்திற்கான கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

    இந்த கருணை மதிப்பெண்கள் பின்னர் ரத்து செய்யப்பட்டன.

    ஜூன் 14-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடைத்தாள் மதிப்பீடு முன்கூட்டியே முடிந்ததால் 10 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    சிபிஐ
    பீகார்
    கைது

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    நீட் தேர்வு

    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு தமிழ்நாடு
    நாடு முழுவதும் நீட் தேர்வு மே 07 இல் நடக்கிறது! முன் ஏற்பாடுகள் தீவிரம்  இந்தியா
    தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை  சென்னை

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    பீகார்

    வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம் டெல்லி
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இந்தியா
    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி டெல்லி
    '42% பட்டியலினத்தவர்கள் வறுமையில் வாடுகின்றனர்': பீகார் சாதி கணக்கெடுப்பால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்  இந்தியா

    கைது

    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன் கர்நாடகா
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு  மக்களவை
    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி  காவல்துறை
    சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்  இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025