
திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் வினோத் குமார் சோன்கர் தலைமையிலான மக்களவையின் நெறிமுறைக் குழு நாளை கூடுகிறது.
திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், நாளை இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வரைவு அறிக்கையை அந்த குழு பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக தகுதி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் சில குறிப்பிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ட்ஜ்வ்க்க்
2005இல் இதே குற்றத்திற்காக தகுதி நீக்கப்பட்ட 11 எம்பிக்கள்
2005ஆம் ஆண்டிலும் இதே போல கேள்வி கேட்பதற்கு பணம் பெற்றதாக 11 எம்.பி.க்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அந்த 11 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
உச்ச நீதிமன்றம் 2007 ஜனவரியில் இந்த தகுதி நீக்கத்தை உறுதி செய்தது.
எனவே, திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராகவும் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.
நாளை நடக்க இருக்கும் மக்களவை நெறிமுறைக் குழுவின் கூட்டம் குறித்த தகவல் கடந்த ஞாயிற்றுகிழமை வெளியிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றப்பட்ட அந்த அறிவிப்பில், திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான வரைவு அறிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.