விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
2023-24ஆம் ஆண்டிற்கான விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முல் விலையை(MSP) அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று டெல்லியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
"விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்கவும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுக்கான விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முல் விலை நன்றாக அதிகரித்துள்ளது.
இந்த வருடம், பிற விளைபொருள்களை விட பாசிப்பயிரின் குறைந்தபட்ச கொள்முல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
details
இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
நெல், கம்பு, உளுந்து, சூரியகாந்தி விதை, பருத்தி, பாசிப்பயிர், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கான ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
2,040 ரூபாயாக(100 கிலோவுக்கு) இருந்த நெல்லின் குறைந்தபட்ச கொள்முல் விலை ரூ.2,183 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7,755 ரூபாயாக(100 கிலோவுக்கு) இருந்த பாசிப்பயிரின் குறைந்தபட்ச கொள்முல் விலை ரூ.8,558ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சோயாபீன்ஸின் விலை ரூ.4,600 ஆகவும், எள்ளின் விலை ரூ.8,635 ஆகவும், பருத்திக்கான விலை ரூ.6,620 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால பருத்திக்கான குறைந்தபட்ச கொள்முல் விலை ரூ.7,020 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1,310 ரூபாயாக(100 கிலோவுக்கு) இருந்த மக்கா சோளத்தின் குறைந்தபட்ச கொள்முல் விலை ரூ.2,090ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1,550 ரூபாயாக(100 கிலோவுக்கு) இருந்த கேழ்வரகின் குறைந்தபட்ச கொள்முல் விலை ரூ.3,846 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.