
இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு
செய்தி முன்னோட்டம்
'உலகின் மசாலா கிண்ணம்' என்றழைக்கப்படும் நாடு எதுவென்று தெரியுமா? அது வேறெதுவுமில்லை, இந்தியா தான். ஆம், உலகின் மசாலா கிண்ணம் என்று இந்தியாவையே அழைக்கிறார்கள்.
சர்வதேச தர நிர்ணய அமைப்பு பட்டியலிட்டிருக்கும் 109 மாசாலாப் பொருட்களில் 75 மசாலப் பொருட்கள் இந்தியாவிலேயே விளைவிக்கப்படுகின்றன. மேலும், உலகின் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களில் 70% இந்தியாவிலேயே விளைவிக்கப்படுகின்றன.
இந்தியாவை உலகின் மசாலா கிண்ணம் என அழைப்பதற்கு இது மட்டும் காரணம் அல்ல. இந்திய மசாலாப் பொருட்களின் 7000 ஆண்டு கால வரலாறும் ஒரு காரணம்.
வரலாற்றை எழுதி வைக்கத் தொடங்குவதற்கு முன்பே தொடங்கிவிட்டது இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு. உலகம் முழுவதும் இந்தியாவின் பெயர் சொல்லும் மசாலாப் பொருட்களின் வரலாற்றின் சிறு துளி இங்கே.
வரலாறு
இந்திய மாசாலப் பொருட்களின் வரலாறு:
ஐரோப்பிய கடல் வணிகம் இந்தியாவை அடைவதற்கு முன்பே இந்தியாவின் மசாலா மேற்கத்திய நாடுகளை அடைந்திருக்கிறது.
மெஸபடோமியா, எகிப்து, அரேபியா, கிரேக்கம் மற்றும் ரோம் உள்ளிட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகங்களும் இந்தியாவின் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அது இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் என அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.
இந்திய மசாலாப் பொருட்கள் சுவை, நிறம் மற்றும் மனமூட்டிகளாக மட்டும் பயன்படாமல் பல்வேறு மருத்துக் குணங்களையும் கொண்டிருந்ததே வரலாறுகள், நாகரீகங்கள் மற்றும் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அவை புகழ் பெற்றிருப்பதற்கான காரணம்.
7ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை அரேபிய வணிகர்களே இந்தியாவிலிருந்து மசாலாப் பொருட்களை வாங்கிச் சென்று மேற்கத்திய நாடுகளில் வர்த்தகம் செய்திருக்கிறார்கள்.
வணிகம்
இந்திய மசாலாப் பொருட்கள் குறித்த கட்டுக் கதைகள்:
இந்தியாவிலிருந்து மசாலாப் பொருட்களை வாங்கிச் சென்று மேற்கத்திய நாடுகளில் விற்பனை செய்த அரேபிய வணிகர்கள், அவற்றை இந்தியாவிலிருந்து வாங்கி வருவதாகக் கூறாமல் பல்வேறு கட்டுக் கதைகளைப் பரப்பியிருக்கிறார்கள்.
BCE 5ம் நூற்றாண்டில், இலவங்கப்பட்ட குறித்த கதை ஒன்றை அரேபிய வணிகர் ஒருவரிடம் இருந்து கேள்விப்பட்டதாக அப்போதைய கிரேக்க வரலாற்று ஆய்வாளர் ஹெரேடோட்டஸ் என்பவர் எழுதியிருக்கிறார்.
அதாவது, அரேபியாவின் உயரமான மலைகளின் மீது வளரும் இலவங்கப்பட்டைகள் மிகப்பெரிய பறவை ஒன்று தன்னுடைய கூட்டுக்கு எடுத்து வருவதாகவும், அவற்றிடமிருந்து இலவங்கப்பட்டைகளைக் கைப்பற்ற பெரிய கழுதைகளை உணவாக வழங்கி, அந்த உணவின் எடை தாங்க முடியாமல் கீழே விழும் கூட்டிலிருந்து இலவங்கப்பட்டகளை எடுத்து வருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
வரலாறு
இந்தியாவுடன் கடல் வணிகம்:
கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் இந்திய மசாலாப் பொருட்களை மேற்கத்திய நாடுகளில் விற்பனை செய்வதில் அரேபியர்களே முன்னிலையில் இருந்திருக்கிறார்கள்.
பின்னர், 15ம் நூற்றாண்டிலேயே இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டறிந்து இந்தியர்களுடன், இந்திய மசாலாப் பொருட்களை வாங்கிச் சென்றிருக்கிறார்கள் ஐரோப்பியர்கள்.
ஃபெர்டினென்டு மெக்கெல்லன், வாஸ்கோ ட காமா, மற்றும் கிரிஸ்டோபர் கொலம்பஸ் உள்ளிட்டோர் இந்தியாவிற்கான குறைந்த செலவிலான கடல் வழியைக் கண்டறிய முயற்சி செய்தவர்களில் முக்கியமானவர்கள்.
இவர்களில் போர்ச்சுகீசியரான வாஸ்கோ ட காமா, 1947ம் ஆண்டு ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்து, 1948ம் ஆண்டு இந்தியாவின் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் கால் பதித்திருக்கிறார். பின்பு அங்கிருந்து பெருமளவு மசாலாப் பொருட்களுடன் மீண்டும் ஐரோப்பாவிற்குச் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்தியா
இந்திய மசாலாப் பொருட்கள் சந்தை:
இந்திய மசாலாப் பொருட்களைக் கைப்பற்றவே பல்வேறு நாடுகள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
2022-23 ஆண்டில் ரூ.31,761 கோடி மதிப்பிற்கு உலகம் முழுவதும் மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி செய்திருக்கிறது இந்தியா. மேலும், 2022ம் ஆண்டு இந்திய மசாலாப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 1.60 லட்சம் கோடி ரூபாய்.
இதுவே 2028-ம் ஆண்டு இந்திய மாசாலப் பொருட்களின் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடியாக உயரும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளே இந்திய மசாலாப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளாக இருக்கின்றன. மேலும், இந்திய மாசாலப் பொருட்களின் தரத்திற்காகவே தனி பெயர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.