Page Loader
2024 பட்ஜெட்டில், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள்
ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்

2024 பட்ஜெட்டில், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 23, 2024
12:00 pm

செய்தி முன்னோட்டம்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல நிதி ஒதுக்கீடுகளை பற்றி அறிவித்த அவர், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். பீகாரில் நெடுஞ்சாலைகளை அமைக்க, குறிப்பாக 4 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதற்காக ரூ.26,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிஹாரில் மருத்துவ உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். அதேபோல ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். தற்போது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களான நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் அந்தந்த மாநிலங்களுக்கு சிறப்புக் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஆந்திர மாநில வளர்ச்சி நிதி

ட்விட்டர் அஞ்சல்

பீகார் மாநிலத்துக்கான நிதி