வங்கக்கடலில் உருவாகும் 'முரசு' புயல் மற்றும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: முழு வானிலை அறிக்கை
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து 'முரசு' புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்புயலுக்கு இந்தியா சார்பில் தமிழ் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. மேலும், அக்டோபர் 23-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மற்றொரு தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. சர்வதேச விதிமுறைகளின்படி, ஆசிய நாடுகளின் சுழற்சி முறை பெயரிடுதலின் கீழ் அடுத்து உருவாகும் இந்தப் புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என்ற தமிழ் பெயர் சூட்டப்படவுள்ளது.
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 26-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னை வானிலை மற்றும் அடுத்தடுத்த நாட்களுக்கான நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.