NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 50 மூத்த மருத்துவர்கள் 'மொத்த ராஜினாமா': ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 50 மூத்த மருத்துவர்கள் 'மொத்த ராஜினாமா': ஏன்?
    ஜூனியர் டாக்டர்கள் தற்போது சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்

    ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 50 மூத்த மருத்துவர்கள் 'மொத்த ராஜினாமா': ஏன்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 09, 2024
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஏராளமான மூத்த மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.

    மறுபுறம் கொல்கத்தா மருத்துவமனையுடன் இணைந்த ஜூனியர் டாக்டர்கள் தற்போது சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதனை மேற்கோள் காட்டி, செவ்வாய்க்கிழமை காலை அரசு நடத்தும் ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் கூட்டத்தில் மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

    "இன்றைய HoDs கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது ஒரு காரணத்திற்காக போராடும் அந்த இளம் மருத்துவர்களுக்கு எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகும்," என்று ஒரு மூத்த மருத்துவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

    உண்ணாவிரதம்

    ஜூனியர் டாக்டர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் சீனியர் மருத்துவர்களும் கலந்துகொண்டனர்

    என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களும் தங்கள் ஆர்ஜி கர் சகாக்களின் வழியை பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    செவ்வாய்கிழமை துர்கா பூஜை விழாக்களுக்கு மத்தியில் தொடர்ந்து நான்காவது நாளாக ஜூனியர் டாக்டர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

    இந்த நேரத்தில் "சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உரிய அதிகாரியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை" என்று மேடையில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. மாலையில் இரண்டு பேரணிகளில் அவர்களுடன் மூத்த சகாக்களும் கலந்து கொண்டனர்.

    மத்திய கொல்கத்தாவின் எஸ்பிளனேட் பகுதியில் உள்ள டோரினா கிராசிங்கில் காலை 9 மணிக்கு மூத்த மருத்துவர்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொல்கத்தா
    மருத்துவக் கல்லூரி

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    கொல்கத்தா

    இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா
    சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு மேற்கு வங்காளம்
    கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை திரிணாமுல் காங்கிரஸ்
    கொல்கத்தா விமானநிலையத்தில் மோதிக்கொண்ட இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் விமான நிலையம்

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025