ஆர்ம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி, அதிரடியாக மாற்றப்பட்ட சென்னை காவல் ஆணையர்
செய்தி முன்னோட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை(05.07.2024) இரவு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்னே வைத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டுகளை அடுக்கி வருகின்றன.
இந்த நிலையில், இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக சென்னை மாநகரத்தின் காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவரிடத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் ஐபிஎஸ் புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
embed
அதிரடியாக மாற்றப்பட்ட சென்னை காவல் ஆணையர்
#BREAKING | சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!#SunNews | #ChennaiPolice | @chennaipolice_ pic.twitter.com/ahKNysIht2— Sun News (@sunnewstamil) July 8, 2024