Page Loader
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக வழக்கு - உயர் நீதிமன்றத்தில் முறையீடு 
ஆன்லைன் விளையாட்டு தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிறுவனம்

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக வழக்கு - உயர் நீதிமன்றத்தில் முறையீடு 

எழுதியவர் Siranjeevi
Apr 26, 2023
03:54 pm

செய்தி முன்னோட்டம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு தடைவிதிக்கப்பட்டது. இதனிடையே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி காணொலி வாயிலாக ஆஜராகி முறையீடு செய்தார். பின்னர் முறையீட்டை கேட்ட நீதிபதிகள் மனுதாக்கல் செய்து, மனுக்கள் நடைமுறைகள் முடிந்தால் வழக்கு நாளை பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post