தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை
செய்தி முன்னோட்டம்
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரிர் மீதான விசாரணை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு சோதனைகளை நடத்தியது.
சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டையில் உள்ள மண்டையூர் அருகே விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்த அப்துல் கான் மற்றும் தஞ்சாவூரில் உள்ள குளந்தை அம்மாள் நகரில் வசிக்கும் அகமது ஆகிய இரு சந்தேக நபர்களிடம் தேடுதல்கள் முதன்மையாக மேற்கொள்ளப்பட்டன.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணவும், ஆதாரங்களை சேகரிக்கவும் தமிழக காவல்துறையும் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தமிழகம்
செல்போன், பென்டிரைவ் பறிமுதல்
ஜனநாயகத்துக்கு எதிரான பிரச்சாரம் போன்ற தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக சர்வதேச இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரிரின் (HuT) ஆறு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரிருக்கு ஆட்சேர்ப்பு செய்தவர்களை கண்டுபிடிக்க இந்த சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனையின் மூலம் செல்போன், பென்டிரைவ் போன்ற கருவிகள் பறிமுதல் செய்யப்ட்டுள்ளன.
இன்று காலை 5:30 மணி முதல் இந்த சோதனைகள் நடந்து வருகின்றன. தற்போது வரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.