Page Loader
பேரறிஞர் அண்ணா நினைவு நாள்: திமுக சார்பில் அமைதிப் பேரணி

பேரறிஞர் அண்ணா நினைவு நாள்: திமுக சார்பில் அமைதிப் பேரணி

எழுதியவர் Sindhuja SM
Feb 03, 2024
10:49 am

செய்தி முன்னோட்டம்

பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், திமுக இன்று காலை அமைதி பேரணி ஒன்றை நடத்தியது. திமுக பொது செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று நடத்தப்பட்ட திமுக அமைதி பேரணியில், திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் வரை திமுக பொது செயலாளர் துரைமுருகன் தலைமையில் அனைவரும் அமைதியை கடைபிடித்து நடந்து சென்றனர். அதன் பிறகு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, மா.சுப்ரமணியன், கனிமொழி ஆகியோர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ட்விட்டர் அஞ்சல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் - திமுக சார்பில் அமைதிப் பேரணி