இனி சென்னை விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் கூட்டத்தில் நிற்க தேவையில்லை; வந்தாச்சு FTI-TTP
செய்தி முன்னோட்டம்
விமான நிலையங்களில் இந்திய பயணியர் குடியுரிமை சோதனை பிரிவில் (Immigration) இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. நேரத்தை மிச்சமாகும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எப்.டி.ஐ.டி.டி.பி. (விரைவான குடியுரிமை பரிசோதனை சேவை) என்ற புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த சேவை, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள், விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை சோதனை பிரிவில் அனுமதி முத்திரை பெறுவது அவசியம்.
ஆனால் பயணியர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நேரத்தில், பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும்படி ஆகிறது. இதை எளிமைப்படுத்தும் வகையில், FTI-TTP எனும் விரைவான சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The Modi govt is committed to making international travel easier and hassle-free for our citizens and OCI cardholders. Under this vision, today launched the 'Fast Track Immigration-Trusted Traveller Program' (FTI-TTP) for Mumbai, Chennai, Kolkata, Bengaluru, Hyderabad, Cochin and… pic.twitter.com/5FDlbedbaO
— Amit Shah (@AmitShah) January 16, 2025
விவரங்கள்
விரைவான சேவையை பெற நெறிமுறைகள் வெளியீடு
இந்த சேவை ஏற்கனவே டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் செயல்படுகிறது.
தற்போது இந்த சேவை சென்னை, மும்பை, கொல்கட்டா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் ஆமதாபாத் விமான நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், இந்த வசதி இந்திய குடிமக்களுக்கும் OCI அட்டைதாரர்களுக்கும் இலவசமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சேர, விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை வழங்கி, தேவையான ஆவணங்களை போர்ட்டலில் (https://ftittp.mha.gov.in) பதிவேற்றுவதன் மூலம் ஆன்லைன் பதிவை முடிக்க வேண்டும்.
பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பயோமெட்ரிக் தரவு வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (FRRO) அல்லது விமான நிலையம் வழியாக அவர்கள் செல்லும் போது சேகரிக்கப்படும்.
செயல்முறை
இந்த புதிய சேவையின் செயல்முறை வழிகள்
பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான செயல்முறை: விமான நிறுவனம் வழங்கிய போர்டிங் பாஸை இ-கேட்டில் ஸ்கேன் செய்து, அதைத் தொடர்ந்து அவர்களின் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்வதாகும்.
வருகை மற்றும் புறப்பாடு புள்ளிகள் இரண்டிலும், பயணிகளின் பயோமெட்ரிக்ஸ் இ-கேட்டுகளில் அங்கீகரிக்கப்படும். இந்த அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும், இ-கேட் தானாகவே திறக்கப்படும், மேலும் குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.
இந்த முயற்சி, 'விக்சித் பாரத்'@2047-ன் ஒரு பகுதியாகும்.
ஆரம்பத்தில், இது இலவசமாக வழங்கப்படுகிறது, மேலும் அதன் முதல் கட்டத்தில், இது நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களை உள்ளடக்கும்.
இந்த முயற்சி டிஜியாத்ரா அமைப்பைப் போன்றது என்று விமான நிலைய வட்டாரம் குறிப்பிட்டது.
சென்னை விமான நிலையத்தில், இந்த சேவைக்கு நான்கு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.