
போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மோசடி மற்றும் போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
போலியான ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
காசிம், மோனிஸ் மற்றும் சோயப் என அடையாளம் காணப்பட்ட இந்த மூவரும், போலி மற்றும் மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மர்ம நபர்கள்
நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள்
கடந்த செவ்வாயன்று, பாதுகாப்புச் சோதனைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, நாடாளுமன்ற மாளிகையின் ஃப்ளாப் கேட் நுழைவாயிலில், மூவரையும் CISF பணியாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் அளித்தபோது, அந்த ஆவணங்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது.
மேலும் அந்த அட்டைகளை ஆய்வுக்கு அனுப்பியபோது, அவை போலியானது என தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் டீ வீ ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்திற்குள் எம்.பி.யின் ஓய்வறை கட்டும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் சிஐஎஸ்எஃப் பணியாளர்களால் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள்
#JustNow | நாடாளுமன்றத்திற்குள் போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேரை CISF காவல் துறையினர் கைது செய்துள்ளனர்!
— Sun News (@sunnewstamil) June 7, 2024
இச்சம்பவம் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி நடந்த நிலையில், எம்.பி.க்களுக்கான ஓய்வு அறை கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் இவர்களை பணியமர்த்தியதாக…