OCI: இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
காலிஸ்தான்காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பலரின் வெளிநாட்டுக் குடியுரிமை (OCI) பதிவை ரத்து செய்யும் நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், கனேடிய பிரஜை மற்றும் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே இராஜதந்திர மோதல் நடந்து வரும் நிலையில் இது நடந்துள்ளது.இதற்கிடையில், OCI பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ:
OCI என்றால் என்ன?
OCI என்பது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் குடியுரிமை. இந்த குடியுரிமை பெற்ற பயனாளிகளுக்கு, வழக்கமாக ஒரு வெளிநாட்டு பிரஜைக்கு வழங்கப்படாத பல சலுகைகளை கிடைக்கும். அனைத்து OCI கார்டுதாரர்களும், நீண்ட கால விசா இல்லாத பயணம் மற்றும் இந்தியாவில் தங்குதல் போன்ற பலன்களை அனுபவிக்கலாம். அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் போது, காவல்துறை அதிகாரிகளிடம் தங்கள் வருகை குறித்த கட்டாய பதிவிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். மேலும், கல்வி, பொருளாதாரம் மற்றும் நிதித் துறைகளில் குடியுரிமை பெறாத இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) இருக்கும் அதே நன்மைகள் இந்த OCI வைத்திருப்பவர்களுக்கும் உண்டு.
OCI தகுதி மற்றும் தகுதியின்மை
ஜனவரி 26, 1950 இல் இந்தியக் குடிமக்களாக இருந்தவர்கள் அல்லது அந்தத் தேதியில் குடியுரிமை பெறத் தகுதி பெற்றவர்கள் தகுதியான நபர்களில் அடங்குவர். ஆகஸ்ட் 15, 1947 க்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் தகுதியானவர்கள். இருப்பினும், பங்களாதேஷ், பாகிஸ்தான் அல்லது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பிற நாடுகளின் குடிமக்களாக இருப்பவர்கள் தகுதியற்றவர்கள். கடந்த ஆண்டு ஜனவரி 31 வரை 4.068 மில்லியன் OCI பதிவு அட்டைகள் வழங்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) இணையதளம் கூறுகிறது.
இந்திய அரசாங்கம் OCI ரத்து செய்வதற்கான காரணங்கள்
இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன், தவறான பிரதிநிதித்துவம் அல்லது மோசடியின் கீழ், OCI பதிவைப் பெற்றால், அதை அரசாங்கம் ரத்து செய்யலாம் என்று MEA கூறுகிறது. ஒரு வெளிநாட்டு குடிமகன், இந்திய அரசியலமைப்பின் மீது அதிருப்தி காட்டினால், அது ரத்து செய்யப்படலாம் எனவும் அரசாணை உள்ளது. "அவசியம்... இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, எந்தவொரு வெளிநாட்டுடனான இந்தியாவின் நட்புறவு அல்லது பொது மக்களின் நலன்களுக்காகவும்" அவசியமானால் OCI பதிவு ரத்துசெய்யப்படலாம் என MEA இணையதளம் தெரிவிக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே வெளிநாட்டில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் OCI கார்டுகளை இந்தியா ரத்து செய்யவுள்ளது.
உலகின் எந்த நாட்டில் உள்ள காலிஸ்தானிகளை MEA குறிப்பிடுகிறது?
செய்திகளின் படி , இந்திய அரசாங்கம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கா (USA), ஐக்கிய இராச்சியம் (UK), ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ள காலிஸ்தானி பயங்கரவாதிகளை அடையாளம் காணவும், அவர்களின் OCI அட்டைகளை ரத்து செய்யவும், புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) மற்றும் கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் ஆகியோரின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைப்பற்றிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.