
புதிய லோகோவுடன் புதுப்பொலிவு பெறும் ஏர் இந்தியா விமானங்கள்
செய்தி முன்னோட்டம்
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரியில் டாடா நிறுவனம் கைப்பற்றியது.
ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் கைப்பற்றியது முதல் அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்திடம் 500 புதிய விமானங்களையும் டாடா குழுமம் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஏர் இந்தியா நிறுவனம் தங்களின் புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது.
அடர் சிவப்பு நிறத்தில் வெள்ளை பின்புலத்தில் ஏர் இந்தியா என எழுதப்பட்டுள்ளது. இந்தியா என முடியும் இடத்தில் தங்க நிறத்தில் இறகுகளும் அந்த லோகோவில் இடம் பெற்றிருந்தன.
தற்போது பிரான்சின் துலூஸ் நகரில், விமானங்களுக்கு ஏர் இந்தியாவின் புதிய தீமில் வண்ணம் பூசப்பட்டுவரும் புகைப்படங்களை அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
புதுப்பொலிவு பெறும் ஏர் இந்தியாவின் A350 ரக விமானங்கள்
Here's the first look of the majestic A350 in our new livery at the paint shop in Toulouse. Our A350s start coming home this winter... @Airbus #FlyAI #AirIndia #NewFleet #Airbus350 pic.twitter.com/nGe3hIExsx
— Air India (@airindia) October 6, 2023