LOADING...
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்திலிருந்து 'Black box' மீட்கப்பட்டது

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்திலிருந்து 'Black box' மீட்கப்பட்டது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 13, 2025
05:51 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வாளர்கள், இடிபாடுகளில் இருந்து "கருப்புப் பெட்டியை" மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை, போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலும் தரையிலும் இருந்த 265 பேர் கொல்லப்பட்டனர். முக்கியமான விமானத் தரவுகளையும் காக்பிட் உரையாடல்களையும் பதிவு செய்யும் "Black Box", இந்த பேரழிவு சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் மிக முக்கியமானதாக இருக்கும்.

மீட்பு விவரங்கள்

Black Box மீட்பு

விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) ஒரு பெரிய குழுவும், குஜராத் அரசாங்கத்தைச் சேர்ந்த 40 பணியாளர்களும், விமானத்தால் மோதிய மருத்துவர்களின் விடுதியின் கூரையில் டிஜிட்டல் விமானத் தரவுப் பதிவாளர் அல்லது "Black Box-யை" கண்டுபிடித்தனர். "விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கருப்புப் பெட்டியை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகக் குழு மீட்டுள்ளது" என்று மாநில மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் AFP இடம் தெரிவித்தார். இருப்பினும், அது விமானத் தரவுகளா அல்லது காக்பிட் குரல் பதிவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சான்றுகள் சேகரிப்பு

இடிபாடுகளில் இருந்து DVR-ம் மீட்கப்பட்டது

தொடர்புடைய முன்னேற்றத்தில், குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS), விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (DVR) மீட்டது. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் கீழே விழுந்து, அருகிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் மோதியதில், இடிபாடுகளுக்கு இடையில் DVR கண்டுபிடிக்கப்பட்டது. மீட்புப் பணியை உறுதிசெய்த ஏடிஎஸ் அதிகாரி ஒருவர், "இது ஒரு DVR., இதை நாங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளோம்" என்றார்.