Loading...
நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 3 நபர்கள் ராஜஸ்தானில் கைது
நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 3 நபர்கள் ராஜஸ்தானில் கைது

நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 3 நபர்கள் ராஜஸ்தானில் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
01:26 pm

செய்தி முன்னோட்டம்

மும்பையின் ஜுஹு பகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மூன்று முக்கிய குற்றவாளிகளை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வைத்துப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பை காவல்துறையின் ரகசியத் தகவலின் பேரில், ராஜஸ்தான் மாநிலத்தின் கொள்ளையர் எதிர்ப்பு சிறப்புப் படையும் கோட்டா நகர காவல்துறையும் இணைந்து இந்த கூட்டுக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. கைதானவர்களில் இருவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பூல் சிங் மற்றும் ரெஹான் என்றும், மற்றொருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மகாராஷ்டிரா-குஜராத் எல்லையிலும் மேலும் ஒருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

சதித்திட்டம்

சதித்திட்டம் மற்றும் கைவிடப்பட்ட இருசக்கர வாகனம்

தாக்குதலுக்குப் பிறகு அந்தேரி ரயில் நிலையத்திற்கு அருகில் குற்றவாளிகளால் கைவிடப்பட்ட இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த வாகனம் மும்பையில் பதிவு செய்யப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளில், வெள்ளை நிறச் சட்டை அணிந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுடுவதும், மூன்றாவது நபர் இருசக்கர வாகனத்துடன் தப்பிக்கத் தயார் நிலையில் காத்திருப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட இருவர் புனே-ஜெய்ப்பூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோட்டா ரயில் நிலையத்திற்கு திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு வந்தடைந்த போது சுற்றி வளைக்கப்பட்டனர்.

லாரன்ஸ் பிஷ்னோய்

பாலிவுட்டை உலுக்கிய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்

இத்தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதுடன், நடிகர் சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றும் நபர்களுக்குப் புதிய மிரட்டல்களையும் விடுத்துள்ளது.

நடிகர் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமுமின்றி தப்பிய நிலையில், அவரது ஓட்டுநர் ஃபிர்தௌஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சவுகான் ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT