
ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
சூதாட்டத்துக்கு தடை என்றால் அனைத்து விதமான சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்க கோரியும்,
முக்கியமாக இளைஞர்களை தவறான பாதையில் கொண்டு செல்லும் ஆபாச இணையத்தளங்களையும் தடை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பார்னோகிராஃபி உள்ளிட்ட செயலிகள் இணையதளங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளம்பரத்துக்கு சரத்குமார் மீது தொடர்ந்து கேள்விகள் எழும்ப, நீங்கள் தடை செய்தால் நான் ஏன் நடிக்க போகிறேன் எனவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | ஒன்றிய அரசுக்கு சரத்குமார் அவசர கோரிக்கை!#SunNews | @realsarathkumar | #OnlineRummy pic.twitter.com/P6Wt36lhYG
— Sun News (@sunnewstamil) April 17, 2023