Page Loader
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம்
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம்

எழுதியவர் Nivetha P
Apr 11, 2023
11:04 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் இதற்கான தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காமல் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார். பின்னர் மீண்டும் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக முதல்வர் ஆளுநருக்கு அண்மையில் அனுப்பிவைத்தார். எனினும் அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையே நேற்று ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று(ஏப்ரல்.,10) ஒப்புதலளித்துள்ளார். இதனையடுத்து தற்போது இந்த சட்டமானது தமிழக அரசின் அரசிதழலில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்

தடை சட்டத்தின் தண்டனைகள் குறித்த விவரங்கள்

இந்த தடை சட்டத்தினை மீறுவோருக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்த விவரம், ஆன்லைனில் பணமா அல்லது வேறு வெகுமதிகள், பரிசு பொருட்களை வழங்கும் விளையாட்டினை விளையாடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்த விளையாட்டிற்கான விளம்பரத்தினை செய்வோருக்கு 1 ஆண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ஆன்லைன் ரம்மி தொடர்பான எந்தவொரு விளையாட்டினை விளையாடுவோருக்கும் ரூ.10லட்சம் அபராதம் அல்லது 3ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும் இந்த விளையாட்டுகள் குறித்து விளம்பரம் செய்து ஒருமுறை தண்டனை பெற்றப்பின்னர் மீண்டும் அதனை செய்தால் 1-3 ஆண்டுகாலம் வரை சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.