
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்: தமிழக அரசு ஆணை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கிய பணிகளில் உள்ள 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு: அனிஷா ஹூசைன் - சிலை திருட்டுத் தடுப்பு பிரிவு (Idol Wing) ஐஜியாக நியமனம். எஸ். லட்சுமி - சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சோனல் சந்திரா- சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு (வடக்கு) இணை கமிஷனராக நியமனம். ஜி. ஜவகர் - சென்னை சிபிசிஐடி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்
மேலும் சில மாற்றங்கள்
ஆர். சுகாஸினி - சென்னை பெருநகர் போக்குவரத்து துணை கமிஷனராக நியமனம். திவ்யா - பதவி உயர்வுடன் கோவை காவல் தலைமையக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். பி. விஜயகுமார் - சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை கமிஷனராக நியமனம். ஷாஜிதா - பதவி உயர்வில் சிபிசிஐடி ஒருங்கிணைப்பு எஸ்பியாக நியமனம். பண்டி கங்காதர் - சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்கள், காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதிய பணிகளில் அதிகாரிகள் விரைவில் பொறுப்பேற்கவுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
IPS Officers Transfers and Postings#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @tnpoliceoffl pic.twitter.com/wj6Op5C1SA
— TN DIPR (@TNDIPRNEWS) August 29, 2025