NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாயாவதி கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாயாவதி கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது 

    மாயாவதி கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 06, 2024
    09:17 am

    செய்தி முன்னோட்டம்

    பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், இந்த தகவலை சென்னை கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் ஐபிஎஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

    கொலைக்கான காரணத்தை அறிய, கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டு கொலைக்குற்றவாளி அங்கிருந்து தப்பியோடியதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

    ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத 6 நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    தமிழ்நாடு 

    பாஜக தலைவர் அமித் மாளவியா காங்கிரஸை சாடியுள்ளார்

    பைக்கில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் தாக்கியதாகவும், அவர் சாலையில் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    "ஒரு தலித்தான தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், வெட்டிக் கொல்லப்பட்டார். ஹூச் சோகத்தின் போது நடந்ததை போல், மூன்றாவது முறையாக ராகுல் காந்தி மௌனம் காப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால், தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவைச் சார்ந்திருக்கிறது." என்று பாஜக தலைவர் அமித் மாளவியா காங்கிரஸை சாடியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    சென்னை

    100 ரூபாயைத் தாண்டியது 1 கிராம் வெள்ளியின் விலை  தங்கம் வெள்ளி விலை
    சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டின் புதிய பேருந்து நிலையத்தின் வரைபடம் வெளியீடு பேருந்துகள்
    ஆபரண தங்கத்தின் விலை சரிவு: சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 22 தங்கம் வெள்ளி விலை

    தமிழ்நாடு

    பேறுகால சிக்கல்கள் குறைந்தாலும், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: IIT மெட்ராஸ் ஆய்வில் தகவல் கர்ப்பம்
    தமிழகம், புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு புதுவை
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர்
    தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது ரம்ஜான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025