நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி
செய்தி முன்னோட்டம்
நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாஜக.,கட்சி பிரமுகரான அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக அபகரித்து கொண்டதாக புகாரளித்திருந்தார்.
அந்த புகாரில் கௌதமி தான் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி பத்திரம் கொண்டு தனது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும்,
இந்த மோசடியினை செய்தது அழகப்பன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார்.
கௌதமி கொடுத்த இப்புகாரை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் அழகப்பன் மற்றும் அவரது மனைவி உள்பட அவர்களது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சொத்து விவகாரம் காஞ்சிபுரம் மத்திய குற்றப்பிரிவிலும், சென்னையிலுள்ள சொத்து விவகாரம் சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் என தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு
டிரான்ஸிட் வாரண்ட்டி பெற்று அவர்களை கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணி நடக்கிறது
மேலும் இது தொடர்பாக அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாளுக்கு லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில், அவர்களது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் பின்னர், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சைபர் க்ரைம் அதிகாரிகளின் உதவியோடு காவல்துறை தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், கேரளா, திருச்சூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அழகப்பன், விசாலாட்சி உள்ளிட்ட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தற்போது கைது செய்துள்ளது.
டிரான்ஸிட் வாரண்ட்டி பெற்று அவர்களை கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணி தற்போது நடந்து வருகிறது.