Page Loader
பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன? 
பாஜக'வில் இருந்து திடீரென விலகிய நடிகை கவுதமி ?

பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன? 

எழுதியவர் Nivetha P
Oct 23, 2023
01:15 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கெளதமி. இவர் பாஜக., கட்சியில் இணைந்து பல ஆண்டுகளாக கள பணிகளை மேற்கொண்ட நிலையில், தற்போது அக்கட்சியிலிருந்து விலகுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தினையும் அவர் கட்சி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே கெளதமி கடந்த மாதம் கமிஷனர் அலுவலகத்தில் தனது சொத்துக்களை ஏமாற்றியதாக கூறி பாஜக.,பிரமுகர் அழகப்பன் மீது புகாரளித்திருந்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் அந்த புகார் மீது எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று(அக்.,23)கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள கெளதமி, 25 ஆண்டுகளாக இக்கட்சியில் ஓயாது உழைத்து ராஜப்பாளையம் தொகுதியில் களப்பணி செய்துள்ளதாகவும், எனினும் தேர்தல் நேரத்தில் கட்சி தன்னை கைவிட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிருப்தி 

5 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

மேலும், நெருக்கடியான நேரத்திலும் கூட தன் பக்கம் நிற்காமல் அழகப்பனுக்கு துணை நிற்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி தரப்பில் தனக்கென்று எந்தவொரு ஆதரவும் கிடைக்காத பட்சத்தில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். கட்சியின் போக்கு தனக்கு மிகப்பெரிய அதிருப்தியளித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் மிக மன வேதனையோடு கட்சியில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார். அதன்படி கெளதமி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த பின்னரே அழகப்பன் உள்பட 6 மீது தற்போது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

கட்சியிலிருந்து விலகல்