NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திமுக ஆட்சிகள் புதிதாக 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது; தமிழக அரசு அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    திமுக ஆட்சிகள் புதிதாக 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது; தமிழக அரசு அறிக்கை
    திமுக ஆட்சிகள் புதிதாக 46 தொழிற்சாலைகள்

    திமுக ஆட்சிகள் புதிதாக 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது; தமிழக அரசு அறிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 03, 2024
    07:11 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021இல் பதவியேற்ற பின் 46 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

    தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தொழில் வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கம் காரணமாகப் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன.

    அவற்றின் மூலம் இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

    2021இல் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030ற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

    தமிழ்நாடு

    முதலீட்டாளர்களின் முதல் முகவரி

    முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

    இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

    மூன்றாம் கட்டமாக, சென்னையில் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 ஒப்பந்தங்கள் மூலம் 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டன.

    ஸ்பெயின்

    ஸ்பெயின் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    நான்காம் கட்டமாக, ஸ்பெயின் நாட்டிற்கு சென்று தமிழ்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன் வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்தார்கள்.

    அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    ஐந்தாவது கட்டமாக, அமெரிக்கா பயணம் மேற்கொண்டு உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும் ஆற்றல் வாய்ந்த மனித வளங்களையும் எடுத்துரைத்து தொழில் தொடங்கிட வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.

    அதன் பயனாக அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 11,516 புதிய வேலைவாய்ப்புககள் உருவாக்கப்பட்டுள்ளன.

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    வெளிநாடுகளுக்குப் பயணம் செல்கிறார்கள் தொழில்கள் வரவில்லையே என்று எதிர்க்கட்சினர் பொறமையால் புழுங்குகின்றனர் அவர்கள் உண்மையை அறியாதவர்கள்.

    மக்களிடம் தவறான தகவல்களைத் தந்து, மக்களிடம் ஆட்சிக்கு எதிராக அவதூறான கருத்துகளை விதைக்க முயல்கிறார்கள்.

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், "உண்மையை மறைக்க முயல்வது, விதையைப் பூமிக்குள் மறைக்க முயல்வதற்குச் சமம்" என்று கூறுவார்கள்.

    அதுபோலத்தான் இவர்கள், திமுக ஆட்சியின் சாதனைகளை மறைக்க முயல்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி திறந்துள்ள தொழிற்சாலைகள் ஆட்சியின் பெருமையை உலகறியச் செய்யும் என்பது உறுதி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-8- 2024 அன்று, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் 19 தொழில்சாலைகளைத் திறந்து வைத்தார்கள்.

    ஒப்பீடு

    முந்தைய ஆட்சியுடன் ஒப்பீடு

    இத்தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 மார்ச் மாதம் நடைபெற்று 6 மாதங்களில் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது என்பது திராவிட மாடல் அரசு தொழில் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறைக்குச் சிறிய சான்றாகும்.

    திராவிட மாடல் அரசு புதிய புதிய தொழிற்சாலைகளை திறந்து வரும் சூழ்நிலையில் முந்தைய ஆட்சிக் காலத்தின் தொழில்வளர்ச்சி பணிகளை ஒப்பிட்டு நோக்குவது இந்த அரசின் சாதனைகளை மேலும் தெளிவுபடுத்தும்.

    அதாவது, 2016-2021, ஆகிய 5 ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில், 15 ஆயிரத்து 543 கோடி ரூபாய் முதலீட்டில் 10,316 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்திடும் 21 தொழிற்சாலைகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, அவற்றுள் 12 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

    46 தொழிற்சாலைகள்

    திமுக ஆட்சியில் 46 தொழிற்சாலைகள்

    ஆனால், திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளது.

    அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன.

    இவற்றின் காரணமாக திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன.

    இதனை ஓரிரு நாட்களுக்கு முன் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழக அரசின் அறிக்கை

    தொழில் வளர்ச்சியில் புரிந்துவரும் சாதனைகளால் தமிழ்நாடு இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாய்த் திகழ்கிறது!

    ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சக ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது!
    (2/2)#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mp_saminathan @TRBRajaa @Guidance_TN pic.twitter.com/lr8OGanCTp

    — TN DIPR (@TNDIPRNEWS) October 3, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க.ஸ்டாலின்
    தமிழக அரசு
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்
    உங்கள் இணைய செயல்பாட்டை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கண்காணிப்பதை தடுப்பது  எப்படி ? இதைத் தெரிந்து கொள்ளுங்கள் மெட்டா
    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி

    மு.க.ஸ்டாலின்

    தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்? முதல் அமைச்சர்
    UPSC லேட்டரல் என்ட்ரி நியமனம் ரத்து குறித்து தமிழக முதல்வர் கூறுவது என்ன?  மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் முதலீடு
    கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி

    தமிழக அரசு

    பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு தமிழக முதல்வர்
    இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள்
    ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி சென்னை
    செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிற்சாலை; தமிழக அரசு ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் அமெரிக்கா

    தமிழகம்

    வாட்டி வதைத்த வெயில்; நாட்டிலேயே மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு மதுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவிருக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்; என்ன காரணம்? பேருந்துகள்

    தமிழ்நாடு

    சைகை மொழியில் திருக்குறள் காணொளியை வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முடிவு தமிழ் மொழி
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; மழை பெய்ய வாய்ப்புள்ளதா? வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025