
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம்
செய்தி முன்னோட்டம்
தெற்கு ரயில்வே, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 34 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி இந்த பண்டிகைகள், வடமாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதனை கருத்தில் கொண்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், பண்டிகை காலத்தில் மக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Puja, Deepavali, Chhath special trains;
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 27, 2024
2023-24: 4,480 trains
2024-25: 5,900 trains (notified till date)
ரயில்கள்
தமிழகம் முழுவதும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு
மொத்தம் 302 பயணங்களுடன் 34 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது தென்னக ரயில்வே. இதில் 28 ரயில்கள் 268 பயணங்களை மேற்கொள்ளும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில்களின் முழுமையான அட்டவணை, வழித்தடங்கள் மற்றும் நேரங்கள் அதிகாரப்பூர்வ தெற்கு ரயில்வே இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி போர்ட்டல்களில் கிடைக்கும்.
மொத்தமாக இந்திய ரயில்வே, நாட்டில் உள்ள அனைத்து பண்டிகை காலங்களில் 6,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.