
கடலூரில் பயங்கர விபத்து: பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி, பலர் காயம்
செய்தி முன்னோட்டம்
கடலூரில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட கடும் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் செம்மங்குப்பம் பகுதியில், ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கி வந்த ரயில் மோதியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. குழந்தைகள் ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளி வேன், ரயில் வருவதை கவனிக்காமல் கடக்க முயன்றதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் வேகத்துடன் மோதியதால் வேன் முற்றிலும் நொறுங்கியது. இதில் இருந்த மாணவ, மாணவிகள் தூக்கி வீசப்பட்டு பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த இருவரும் பள்ளி மாணவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. காயம் அடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - ஒரு மாணவர் உயிரிழப்பு#SunNews | #Accident | #Cuddalore pic.twitter.com/C9iU7TsKsL
— Sun News (@sunnewstamil) July 8, 2025
விசாரணை
விபத்து தொடர்பான விசாரணை தொடர்கிறது
விபத்தின் நேரத்தில் ரயில்வே கேட் திறந்திருப்பதா, மூடப்பட்டிருந்ததா என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை. சிலர், ரயில் வரும்போதும் கேட் மூடப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் பதிவான காட்சிகளில், பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் மற்றும் பைகளும் தண்டவாளம் முழுவதும் சிதறி கிடப்பது பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது. சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய இவ்விபத்து குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.