பறந்தது தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ், மன்னிப்பு கோரிய யூடியூபர் இர்பான்
செய்தி முன்னோட்டம்
யூடியூபில் ஃபூட் ரெவியூ செய்து பிரபலமடைந்தவர் இர்பான்.
இவர் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிடும் ஒரு வீடியோவை சமீபத்தில் பதிவேற்றி இருந்தார்.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும்.
இந்த நிலையில் தான் துபாய்க்கு தனது குடும்பத்தோடு சென்றிருந்த இர்பான், அங்கிருக்கும் மருத்துவமனையில் மனைவிக்கு ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பாலினத்தை கண்டறிந்து, அதனை அறிவித்த குற்றத்திற்காக யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியது தமிழ்நாடு மருத்துவத்துறை.
இந்நிலையில், இர்பான் விசாரணைக்காக அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினரிடம் வாட்ஸ் அப் மூலமும் மற்றும் தொலைபேசி மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இருப்பினும் நடவடிக்கை தொடரும் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
embed
தவறுக்கு மன்னிப்பு கோரிய இர்பான்
BREAKING || பரபரப்பை கிளப்பிய ஒற்றை வீடியோ - மன்னிப்பு கோரினார் இர்பான் https://t.co/Vho56hdKXG #irfanreview | #irfan— Thanthi TV (@ThanthiTV) May 22, 2024