LOADING...
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜின் 'கூலி' எந்த OTTயில் பார்க்கலாம்?
'கூலி', வெளியான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜின் 'கூலி' எந்த OTTயில் பார்க்கலாம்?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2025
11:44 am

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கி, தற்போது திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் 'கூலி' திரைப்படம், வெளியான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனினும், ரஜினியின் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகும் முன்னரே, முதல்நாள் புக்கிங் அடிப்படையில் 'கூலி' இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மிக அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், திரையரங்குகளில் ஓடிய பின், 'கூலி' விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படவிருக்கிறது. படம் OTTplay பிரீமியம் சந்தாதாரர்கள் மூலமாகவும் கிடைக்கும். அதற்கான சரியான வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரும் செப்டம்பர் மாத இறுதியில் 'கூலி' பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவரங்கள்

படத்தின் கதை மற்றும் நட்சத்திர குழு

'கூலி' திரைப்படம் தேவா என்ற கதாபாத்திரத்தை சுற்றி நகர்கிறது. அவரது நெருங்கிய நண்பரின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்த, தேவா அந்த மரணத்தின் உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த தேடலில், அவரது நண்பரின் மகள் ப்ரீதியுடன் இணைந்து ஒரு ஆபத்தான கடத்தல் கும்பலை எதிர்கொள்கிறார். ரஜினிகாந்தைத் தவிர, இப்படத்தில், அமிர் கான், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ரச்சிதா ராம், காளி வெங்கட், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அமைத்துள்ளது அனிருத். ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரன் மேற்கொண்டுள்ளார். 'கூலி' லோகேஷ் கனகராஜின் LCU (Lokesh Cinematic Universe) வரிசையில் சேராத தனிபடமாகும்.