LOADING...
ரவி அரசு - விஷால் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு மகுடம் என தலைப்பு
ரவி அரசு-விஷால் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு மகுடம் என தலைப்பு

ரவி அரசு - விஷால் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு மகுடம் என தலைப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2025
08:13 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ரவி அரசு கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு மகுடம் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கும் இந்தப் படம், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது தயாரிப்பு ஆகும். படக்குழுவினர் தற்போது ஊட்டியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அங்கு ஒரு விறுவிறுப்பான சண்டைக் காட்சியினை படமாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு மும்முரமாகப் பணியாற்றி வருகிறது. தலைப்பு அறிவிப்புடன், படத்தின் அறிமுக வீடியோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஷாலுடன் நடிகைகள் துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம்

ரவி அரசு - விஷால் காம்போ

தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இயக்குனர் ரவி அரசு ஏற்கனவே விஷாலை வைத்து பாயும் புலி திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஷாலின் முந்தைய படமான மதகஜராஜா பிரம்மாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த புதிய படமான மகுடம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படம் ஒரு தரமான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post