
சிம்பு இல்லை, ரம்யா கிருஷ்ணன் இல்லை; பிக் பாஸ் தமிழ்-ஐ ஹோஸ்ட் செய்யப்போவது இவர் தான்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிலையில் பட பணிகள் இருப்பதால் தன்னால் சீசன்-8 பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமுடியாது என அவர் சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அடுத்து யார் 'ஆண்டவர்' பாணியில் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார் என்ற கேள்விகள் எழுந்தன.
நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் மரியாதையையும் நன்மதிப்பையும் பெற்ற ஒரு மூத்த கலைஞரால் மட்டுமே அது சத்தியம் என்பதை மட்டும் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கமலுக்கு பதிலாக ஓரிரு எபிசோடுகளை தொகுத்து வழங்கியதால் இந்த யூகங்கள் வெளியாயின.
அடுத்து யார்
நடிகர் விஜய் சேதுபதி பெயர் அடிபடுகிறது
இந்த நிலையில் தான் நேற்று முதல் நடிகர் விஜய் சேதுபதி தான் அடுத்ததாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் துவங்கவுள்ள இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு ஏற்கனவே இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதோடு தற்போது விஜய் சேதுபதி தான் அடுத்த தொகுப்பாளராக தீர்மானிக்கப்பட்டதால், அவரை வைத்து ப்ரோமோ ஷூட்டும் நடைபெற்று முடிந்ததாகவும் இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதி ஏற்கனவே சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பிக் பாஸ் தமிழ் ஹோஸ்ட்!
#VijaySethupathi will be hosting the #BiggBossTamil of this season !! pic.twitter.com/3snOJCe2sY
— AmuthaBharathi (@CinemaWithAB) August 13, 2024