நண்பா..நண்பி தயாரா? The GOAT அக்டோபர் 3 முதல் OTTயில்!
தளபதி விஜய்யின் சமீபத்திய வெளியீடான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படம் இன்னும் 2 நாட்களில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ஒரு அறிவியல் புனைகதை ஆக்ஷன் த்ரில்லர். இது செப்டம்பர் 5, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் ப்ரோமஷன் பேட்டியின் போது, இயக்குனர் வெங்கட் பிரபு, சுமார் 20 நிமிட டைரக்டர்'ஸ் கேட் காட்சிகளைக் கொண்ட ஒரு எஸ்ட்டெண்டெட் வெர்ஷன், நெட்ஃபிலிக்ஸ் இல் வெளியிடப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'GOAT' அக்டோபர் 3 முதல் Netflix இல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது
விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் என்ட்ரிக்கான அறிவிப்பிற்கு பிறகு வெளியான படம் இது. GOAT இல், சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (SATS) உளவாளி காந்தியின் பாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அவரும் அவரின் நண்பர்களான பிரபுதேவா, பிரஷாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய ஒரு ஆப்பரேஷனில் நடைபெற்ற ஒரு அசம்பாவிதம், விஜயின் வாழக்கையை எப்படி புரட்டி போட்டது என்பது கதை. எம்.எஸ்.காந்தி மற்றும் ஜீவன் காந்தி/சஞ்சய் மேனன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார். அக்டோபர் 3 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.