
தளபதி 69 -இல் இணைக்கிறார் நடிகர் நரேன்
செய்தி முன்னோட்டம்
விஜய்யின் தளபதி 69 -யில் நடிகர் நரேன் இணைகிறார். தளபதி 69இன் நடிகர்-நடிகைகளின் அறிமுகம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
நரேன் கடைசியாக விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு விஜயின் ரசிகர்களை கொண்டாட்ட மோடில் வைத்துள்ளது படக்குழு.
நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தபோது, தான் ஒப்புக்கொண்ட படப்பணிகளை முடித்து விட்டு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழுவதுமாக அரசியலில் இறங்குவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான GOAT படம் நல்ல வசூலை பெற்றது.
அதன் பின்னர், யாரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் திக்குமுக்காட வைத்தது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Welcome to #Thalapathy69 family @itsNarain ♥️#Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @menongautham #Priyamani @hegdepooja #MamithaBaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/eGLY7iyvBR
— KVN Productions (@KvnProductions) October 3, 2024
விவரங்கள்
படத்தின் நடிகர்- நடிகைகள் பட்டாளம்
KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். கடைசியாக அவர் அஜித்தின் துணிவு படத்தினை இயக்கி இருந்தார்.
அடுத்ததாக அவர் கமல்ஹாசனுடன் இணைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக விஜய் உடன் கை கோர்த்துள்ளார்.
தளபதி 69 -க்கு அனிருத் இசையமைக்கிறார்.
தளபதி 69 -இல் தற்போது வரை பாபி தியோல், பூஜா ஹேக்டே, மமிதா பைஜூ, கெளதம் வாசுதேவ் மேனன், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.