Page Loader
தளபதி 69 படத்தில் இணைந்த பீஸ்ட் பட நாயகி!
விஜய் 69 படத்தில் இணைந்த பீஸ்ட் பட நாயகி

தளபதி 69 படத்தில் இணைந்த பீஸ்ட் பட நாயகி!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 02, 2024
01:12 pm

செய்தி முன்னோட்டம்

விஜய்-யின் தளபதி 69 படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் பூஜா ஹெக்டே. இதற்கான அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டது. நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தபோது, தான் ஒப்புக்கொண்ட படப்பணிகளை முடித்து விட்டு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழுவதுமாக அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான GOAT படம் நல்ல வசூலை பெற்றது. அதன் பின்னர், யாரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் திக்குமுக்காட வைத்தது. KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் எனவும், அனிருத் இசையமைக்கிறார் எனவும் அதன் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிவிப்பு

நடிகர்- நடிகையர் அறிமுகம்

நேற்று இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளனர். நேற்று தொடங்கி அடுத்த 3 நாட்கள் அறிவிப்பு வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிமல் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பாபி தியோல். அனேகமாக அவர்தான் முக்கிய வில்லனாக இருப்பார் என யூகங்கள் வெளியான வண்ணம் உள்ளது. பாபி தியோல் ஏற்கனவே சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.