Loading...
ஆகஸ்ட் 21-ல் ஓடிடியில் 'ஜனநாயகன்'! எந்த தளத்தில் பார்க்கலாம்?
ஆகஸ்ட் 21-ஆம் தேதி ZEE5 தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது ஜனநாயகன்

ஆகஸ்ட் 21-ல் ஓடிடியில் 'ஜனநாயகன்'! எந்த தளத்தில் பார்க்கலாம்?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 17, 2026
05:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்', வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி 'ஜீ5' (ZEE5) ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. H. வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், தற்போது ஓடிடி தளத்திற்கு வரத் தயாராகியுள்ளது. கடந்த ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியான 'ஜனநாயகன்' படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. பாக்ஸ் ஆபிஸ் கணிப்புத் தளமான Sacnilk-ன் தகவலின்படி, இத்திரைப்படம் இந்தியாவில் ரூ. 227.14 கோடியையும், உலகளவில் மொத்தம் ரூ. 320.34 கோடியையும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT