அடுத்த செய்திக் கட்டுரை
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படத்தின் ஸ்னீக்-பீக் வெளியானது
எழுதியவர்
Venkatalakshmi V
Oct 03, 2023
05:25 pm
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில், CS அமுதன் இயக்கத்தில், திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் 'ரத்தம்'.
தமிழ்ப்படம் 1 , தமிழ்படம் 2 என ஸ்பூப் படங்களை இயக்கிய அமுதன், முதல்முறையாக ஒரு திரில்லர் கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார்.
பத்திரிக்கைத்துறையில், அரசியல் பிரமுகர் ஒருவரை பற்றி தவறான செய்தி வெளியாகவே, அதனால் வெகுண்டெழும் ஒரு தொண்டன், சம்மந்தப்பட்ட அந்த பத்திரிக்கை செய்தி எழுதியவரை, அவரின் அலுவலகம் தேடி போய் கொலை செய்கிறான்.
அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மீதி கதை என விரிகிறது 'ரத்தம்' படத்தின் ஸ்னீக்பீக்.
இப்படத்தில், விஜய் அண்டனியுடன், ரம்யா நம்பீசன், நந்திதா, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு இசையமைத்துள்ளது கண்ணன் நாராயணன்